தூய ஏகத்துவக் கொள்கையினை அனைத்து மக்களுக்கும் எடுத்து செல்லும் பொருட்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக ஆர்வமிக்க சகோதரர்களுக்கு பேச்சுப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. ஆலிம் பட்டம் பெற்றவர்கள் மட்டுமே மார்க்கத்தை எடுத்து சொல்லல் வேண்டும் அல்லது குறிப்பிட்ட பெரியவர்களின் பரிந்துரையுடையவர்கள் மட்டுமே மார்க்கத்தை ப்ரப்ப வேண்டும் எனக் கூறி அல்லாஹ் முஃமின்கள் அனைவரின் மீதும் விதித்திருக்கும் அழைப்பு பணியினை செவ்வனே செய்ய விடாமல் சிலர் தடுத்து வரும் வேளையில் குர்ஆன் மற்றும் சுன்னா அடிப்படையில் நம் அனைவருக்குமே அழைப்பு பணி கடமை என்பதனை உணர்ந்து இத்தகைய பயிற்சிகளை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கிளைகள் தோறும் வழங்கி வருகிறது. அல்ஹம்துலில்லாஹ். இதனை செய்து வருவதற்கான முக்கிய காரணமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த உம்மத்திற்க்கு உபதேசம் செய்த இரத்தின வரிகளான “என்னிடமிருந்து ஒரு செய்தி கிடைக்கப்பெற்றாலும் அதனை பிறருக்கு எத்தி வைத்து விடுங்கள்” என்பதேயாகும். இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சார்பாக தொடர்ந்து பேச்சுப்பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. சென்ற மூன்று மாதங்களாக ஐகாடி சிட்டிக் கிளையில் நடைபெற்று வந்த பேச்சுப்பயிற்சி வகுப்பில் பத்துக்கும் மேற்ப்பட்ட சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வந்த பயிற்சி நிறைவுப்பெற்றதனை தொடர்ந்து சென்ற 06.01.2012 அன்று நிறைவு வகுப்பு நடைபெற்றது. இந்த நிறைவு வகுப்பு மண்டல நிர்வாகிகள் சகோ.முஹம்மது ஷேக் மற்றும் சகோ.சிக்கந்தர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இதில் அபுதாபி மண்டலத்தின் பேச்சாளர்களாக கீழ்க்கண்ட சகோதரர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அல்ஹம்துலில்லாஹ் 
No comments:
Post a Comment