தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தில் ஐகாட் சிட்டியில் ஏற்கனவே  ஒரு கிளை இயங்கிவருகிறது. இந்நிலையில் ஐகாட் சிட்டி பகுதியில் மற்றுமோர் கிளை புதிதாக துவக்கப்பட்டுள்ளது. ஐகாட் சிட்டி கேம்ப் பகுதிகளில் அல் மிஸ்க் என்ற கேம்ப் ஏரியாவில் இந்த புதிய கிளை துவக்கப்பட்டுள்ளது. சென்ற 19.12.2011 அன்று ஐகாட் சிட்டி கிளைத் தலைவர் பத்தமடை கான்ஷா அவர்களின் தலைமையில் நடைபெற்ற மஷீராவில் இந்த புதிய கிளை துவக்கப்பட்டது. இப்புதிய கிளைக்கு தலைவராக சகோதரர் அப்துர் ரஹீம் அவர்களும் செயலாளராக சகோ. நஸீர் அவர்களும் துணைத் தலைவராக சகோ.பஷீர் அவர்களும் பொருளாராக சகோ.முஸ்தகீம் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். வரும் ஜனவரி மாதம் முதல் ஒவ்வொரு வாரமும் பிரதி வியாழன் தோறும் இஷாத் தொழுகைக்கு பின்னர் அல்மிஸ்க் கேம்பில் வைத்து மார்க்கச்சொற்பொழிவு நடத்துவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment