Sunday, December 25, 2011

அபுதாபி மண்டலத்தின் நிர்வாகிகளுக்கான ”தர்பியா”




தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் நிர்வாகிகளுக்கான ”தர்பியா” முகாம் சென்ற 23.12.2011 அன்று நடைபெற்றது. மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு நடத்தப்பட்ட இந்த தர்பியா முகாம் சரியாக காலை 8.15 மணிக்கு துவங்கியது. முதலாவதாக ஆன்லைன் வாயிலாக தாயகத்திலிருந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மேலாண்மைக் குழு தலைவர் சகோ. ஷம்சுல்லுஹா ரஹ்மானி அவர்கள் “உளத்தூய்மை” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தினார்கள். அதனைத் தொடர்ந்து  ”நிர்வாகிகவியல்” எனும் தலைப்பில் உரை நிகழ்த்தப்படது. இதில் நிர்வாகிகளாக இருப்பவர்கள் கடைபிடிக்கவேண்டிய ஒழுங்குகளை அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்பாளர் சகோ.ஹாமீன் இப்ராஹீம் அவர்கள் அழகான முறையில் பாடம் நடத்தினார்கள். இதனைத் தொடர்ந்து “இஸ்லாமிய இயக்கங்கள் ஒரு பார்வை” எனும் தலைப்பில் சகோ.முஹம்மது ஷேக் அவர்கள் நிர்வாகிகள் அனைவருக்கும் இன்றைய இயக்கங்களின் பின்னணி குறித்து விளக்கமளித்தார்கள். இறுதியாக “மலரும் நினைவுகள்” எனும் தலைப்பில் அபுதாபியில் நமது ஜமாஅத் கடந்து வந்த பாதையினை அமீரக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் சகோ. ஃபழுலுல்லாஹ அவர்களும், அமீரக TNTJ பேச்சாளர் சகோ.யூசுஃப் அலி அவர்களும் அபுதாபி மண்டல மற்றும் கிளை நிர்வாகிகளுக்கு எடுத்துரைத்தனர்.
இந்த தர்பியா முகாமில் அபுதாபி மண்டலத்தின் நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பேச்சாளர்கள் மற்றும் ஐகாட் சிட்டி கிளை நிர்வாகிகள் ஆகியோர் கலந்துக்கொண்டனர். தர்பியா முகாமுக்கான ஏற்பாடுகளை அபுதாபி மண்டல நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:

Post a Comment