தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மர்க்கஸில் அரபி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இலங்கை மௌலவி ஸஃப்வான் அவர்கள் நடத்தும் இந்த வகுப்பில் குர்ஆன் ஓதுதலுக்கு தேவையான அடிப்படை அரபி மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது. அபுதாபி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மர்க்கஸில் வைத்து நடைபெற்று வரும் இவ்வகுப்பு வாரத்திற்கு இருநாட்கள் நடைபெறுகிறது. 26.11.2011 அன்று நடைபெற்ற அரபி வகுப்பு 6வது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வகுப்புகளில் ஆரவத்துடன் சகோதரர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர். 
'அல்லாஹ்வின் வேதத்திலிருந்து ஓர் எழுத்தை ஓதுபவருக்கு ஒரு நன்மை உண்டு. ஒரு நன்மை பத்து நன்மைகளைப் போன்றதாகும். அலிஃப், லாம், மீம் என்பதை ஓர் எழுத்து என்று சொல்ல மாட்டேன். மாறாக அலிஃப் ஓரெழுத்து, லாம் ஓரெழுத்து, மீம் ஓரெழுத்து என்று தான் கூறுவேன் என்றார்கள். அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத்(ரலி) நூல்: திர்மிதி 2910
'குர்ஆனை நன்கு மனனம் செய்து தங்கு தடையின்றி சரளமாக ஓதுபவர் இறைவனுக்குக் கட்டுப்பட்ட கண்ணியமிக்க வானவத் தூதர்களுடன் இருக்கின்றார். சிரமம் மேற்கொண்டு தட்டுத் தடுமாறி ஓதுபவருக்கு இரு கூலிகள் இருக்கின்றன என்று அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸ்லிம் 798
உஸ்மான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: தாமும் குர்ஆனைக் கற்று, பிறருக்கும் அதனைக் கற்றுக் கொடுப்பவர்தாம் உங்களில் சிறந்தவராவார்|என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)
குறிப்பு: இந்த வகுப்பில் சேர்ந்து திருமறைக்குர்ஆனை சரளமாக ஓத விரும்பும் அபுதாபி வாழ் சகோதரர்கள் கீழ்க்கண்ட மொபைல் எண்ணில் தொடர்புக் கொள்ளவும்.
- சகோதரர். சிக்கந்தர் - மண்டலச் செயலாளர் - 05031508489
 - சகோதரர் அன்சாரி - மண்டல துணைச் செயலாளர் - 0554908188
 
No comments:
Post a Comment