Tuesday, November 29, 2011

இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்டவருக்கு ரூபாய் 21500 மருத்துவ உதவி – அபுதாபி ஐகாட் சிட்டி

திருச்சி சமஸ்பிரான் தெருவில் வசிக்கும் ஏழை சகோதரர் ஒருவருக்கு இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டு உடனடியாக சிகிட்சை செய்யும் நிலையில் இருப்பதனை அறிந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சம்ஸ்பிரான் கிளை சகோதரர்கள் தங்களால் இயன்ற பொருளாதார உதவியை செய்தனர். மேலும் அதிகமான பொருளாதாரம் தேவைப்படுவதை அறிந்த சம்ஸ்பிரான் கிளை மற்றும் திருச்சி மாவட்ட தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் அவருக்கு பொருளாதார உதவி செய்யும்படி வேண்டுகோள் விடுத்தனர். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் ஐகாட் சிட்டிக் கிளையின் சார்பாக அவருக்கு உதவி செய்ய முன்வந்தனர்.

கடந்த 5-11-2011 சனிக்கிழமை இரண்டு கிட்னிகளும் பாதிக்கப்பட்ட அந்த ஏழை சகோதரரக்கு அபுதாபி TNTJ சகோதரர்கள் மூலம் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 21500/- மருத்துவ உதவியாக வழங்கப்பட்டது.


No comments:

Post a Comment