தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலத்தின் சிறப்பு செயற்க்குழு கூட்டம் சென்ற 09.02.2012 அன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநிலத் தலைமை கட்டிட நிதி திரட்டுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
இந்த செயற்க்குழுவுக்கு மண்டலத் தலைவர் சகோ.முஹம்மது ஷேக் 
அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்து வரும் அரும்பணிகள் குறித்து சகோ.ஹாமீன் இப்ராஹிம் அவர்கள் உரையாற்றினார்கள்.
அதன் பின்னர் மாநிலத் தலைமை கட்டிட நிதியை எவ்வாறு திரட்டலாம் என்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. உறுப்பினர்கள் அனைவரும் தங்களால் இயன்ற பங்களிப்புகளை மாநிலத் தலைமை கட்டிட நிதிக்கு வழங்குவது என முடிவு செய்யப்பட்டது.
இச்செயற்க்குழுவில் கலந்துக்கொண்டவர்கள் மட்டும் இந்திய ரூபாயில் சுமார் 12.5 இலட்சம் நன்கொடை செய்வதாக வாக்களித்துள்ளனர். அல்ஹம்துலில்லாஹ்.

No comments:
Post a Comment