தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அபுதாபி மண்டலம் ஆண்டு தோறும் பிற மத சகோதரர்களுக்காக பல்வேறு தலைப்புகளில் கட்டுரைப்போட்டியினை நடத்தி வருகிறது.
இஸ்லாத்தினை அவர்கள் ஆழமாக அறிந்துக் கொள்ளக்கூடிய அளவில் தலைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அக்கட்டுரைக்கு தேவையான சிடிக்கள், புத்தகங்கள் போன்றவைகளை நேரடியாக அவர்களுக்கு வழங்கி போட்டியில் கலந்துக் கொள்ள ஆர்வமளிக்கப்படுகிறது. இதன் விளைவாக பிற மத சகோதர சகோதரிகளிடமிருந்து அதிகமான கட்டுரைகள் வந்து சேர்ந்தது. வந்த கட்டுரைகளில் சிறந்த மூன்று கட்டுரைகளை ஜமாஅத்தின் தேர்வுகுழு தேர்வு செய்தது.
தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளுக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி மற்றும் இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் நிகழ்ச்சி கடந்த 03.02.2012 வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு அபுதாபி கேரளா சோஷியல் சென்டரில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு அபுதாபி மண்டல தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் முஹமமது ஷேக் அவர்கள் தலைமை தாங்கினார்கள்.
இதனைத் தொடர்ந்து ஐக்கிய அரபு அமீரகத்தின் ஒருங்கிணைப்பாளர் சகோதரர் ஹாமின் இபுராஹீம் அவர்கள் இஸ்லாம் ஓர் அறிமுகம் எனும் தலைப்பில் சிற்றுரை நிகழ்த்தினார்கள். அதன்பின்னர் வெற்றி பெற்ற முதல் மூன்று கட்டுரையாளர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது
மேலும் கட்டுரை எழுதிய சகோதர சகோதரிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது.முதல் மூன்று பரிசுகளை வென்றவர்கள் விபரம்:
முதல் பரிசு – சகோதரர். ப.ஜெயக்குமார்
இரண்டாம் பரிசு – சகோதரர். எஸ்.பாலமுருகன்
மூன்றாம் பரிசு – சகோ. வெங்கடேசன்
இரண்டாம் பரிசு – சகோதரர். எஸ்.பாலமுருகன்
மூன்றாம் பரிசு – சகோ. வெங்கடேசன்
இதனை தொடர்ந்து இந் நிகழ்ச்சியின் மிக முக்கிய அங்கமான இஸ்லாம் ஓர் இனிய மார்க்கம் எனும் பிற மத சகோதர்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சி நடைபெற்றது. பிற மத சகோதரர்களின் கேள்விகளுக்கு சகோ.ஹாமீன் இப்ராஹிம் பதிலளித்தார்கள்.
கேள்வி கேட்ட அனைவருக்கும் திருக்குர்ஆன் தமிழாக்கம் இலவசமாக வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியின் வாயிலாக மொத்தம் 18 திருமறைக்குர்ஆன் தமிழாக்கம் பிற மத சகோதரர்களுக்கு அன்பளிப்பு செய்யப்பட்டது.
நிகழ்ச்சிக்கு வருகை தந்த பிற மத சகோதர சகோதரிகளுக்கு குறுந்தகடுகள் மற்றும் மனிதனுக்கேற்ற மார்க்கம் இஸ்லாம் என்ற நூலும் இலவசமாக வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியின் நிறைவாக சகோ. யூசுஃப் அலி அவர்கள் நன்றியுரை நிகழ்த்தினார்கள்.வந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து வழங்கப்பட்டது. (அல்ஹம்துலில்லாஹ்)
இது போன்ற போட்டி வருடா வருடம் நடத்தப்படுவது குறிப்பிடதக்கது.


No comments:
Post a Comment